கணவனை கொலை செய்த மனைவி!

யாழில் குடும்ப தகராறு முற்றி வெடித்ததால் மனைவி ஒருவர் கணவரை திருவலையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்- அரியாலை பூம்புகார் எனும் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி தெற்கினை சேர்ந்த அவர் ஏழாலை மயிலங்காடு பகுதியில் வசித்து வந்த பெண்ணை திருமணம் செய்து அரியாலை – பூம்புகார் பகுதியில் வசித்து வந்தார்.

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் நீண்டநாள் முரண்பாடு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் முரண்பாடு முற்றிய நிலையில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *