மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முதலில் சென்னை அணி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய புள்ளிப் பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *