பொலிசாருக்கு பஹந்துடா ஜோடியை கைது செய்வதில் இருந்த ஆர்வம் லொஹான் வழக்கில் இல்லை

அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து கைதிகளை அச்சுறுத்தியதற்காக அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்படுவதை பிற்போடுவதற்கு காவல்துறை பொறுப்பு அமைச்சர் முயற்சிப்பதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பு குழு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்த மேலும் தெரிவிக்கையில்,

காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் இது தொடர்பான புகாரைப் பெற வேண்டும் என்று, பல்வேறு கதைகளை கூறி கைது செய்யாமல் இருக்கின்றார்.

அவரிடம் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என கூறப்படுகின்றது. மேலும் சிறைச்சாலையில் சிசிடிவி கேமரா இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி கைது செய்யும் நடவடிக்கை பிற்போடப்படுகின்றது.

பஹந்துடாவ ஜோடியினை கைது செய்வதில் பொலிசார் மும்முரமாக செயற்பட்டார்கள் என்பது தெரியும். ஆனால் அத்தகைய ஆர்வத்தினை லொஹான் வழக்கில் காட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அமைச்சரையும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் அவர்கள் கைது செய்யப்படாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம் எனவும் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *