திருமலை படகுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிப்பு

முல்லைத்தீவு கடற்பரப்புக்கு, தற்போது திருகோணமலை பக்கம் இருந்து வருபவர்களால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் மரியதாஸ் பிறொட்ரிக் ஜோன்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,

முல்லைத்தீவு, கொக்கிளாய், நாயாறு, மாத்தளன் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 300 வரையான கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தற்போது திருகோணமலை பக்கம் இருந்து 1,000க்கும் மேற்பட்ட படகுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றன எனத் தெரிவித்த அவர், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும் கூறினார்.

Leave a Reply