சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

<!–

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்! – Athavan News

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி பெரிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தமை தொடர்பாக நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.


Leave a Reply