எல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்து தீர்வுக் காண தளபதிகளிடையே 12ஆவது சுற்றுபேச்சுவாரத்தை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திகதியை இறுதி செய்வதற்காக இருதரப்பும் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் 26 ஆம் திகதி பேச்சுவார்தையை நடத்தலாம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா வேறு ஒரு திகதியை முன்மொழிந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது எஞ்சிய பகுதிகளில் படைக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply