மதவாச்சி ஏ- 9 வீதியின் 150 ஆவது கிலோ மீற்றர் தூண் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Advertisement
33 வயதுடைய வவுனியா விமானப்படை முகாமையில் பணி புரிந்து வந்த சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மிகிந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.