சிறுமி எரிக்கப்பட்டு கொலை- மட்டு.உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டில், சிறுமி ஒருவர் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமைக்கு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் படுகொலையின் உண்மைத்தன்மைகள் வெளிக்கொணரப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply