இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அனுகூலங்களை வழங்காமல் இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு தொற்றுக்குள்ளாகும் அரசாங்க ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி பெறாத அரச ஊழியர் ஒருவர் ஏதாவது முறையில் தொற்றுக்குள்ளாகினால் அவர்களை தனிமைப்படுத்தும் போது தனிப்பட்ட விடுமுறையில் குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தடுப்பூசி பெற்றுக் கொண்ட நபர்களின் பாதுகாப்பினை தடுப்பூசி பெறாத நபர்களினால் இல்லாமல் செய்வதற்கு உரிமை இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி பெறாத நபர்கள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுப்பதற்கு எதிர்வரும் நாட்களில் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு பலவந்தமாக தடுப்பூசி செலுத்துவதற்கு எவருக்கும் உரிமையில்லை என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply