தனது 9 வயதான தனது மகளின் உடலை ஸ்பரிசம் செய்தற்காக நன்பனை அடித்து கொன்ற தந்தை!

மத்துகம பிரதேசத்தில் தனது நண்பனை தாக்கிக் கொலைசெய்த சந்தேக நபரொருவரை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டுக்குவந்த நண்பர் 9 வயதான தனது மக்களின் உடலை ஸ்பரிசம் செய்துள்ளதாகவும் இதனை அவதானித்த தந்தை கோபத்தில் தனது நண்பரை தாக்கிக் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த நபர் மத்துகம நாபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கொலையை மேற்கொண்டதாகக் கூறப்படும் 33 வயதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சரீரம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply