எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேலும் மோசமடையலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்காக கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரைக்கு நேற்று சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் அவர் பேசினார்.
” மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர வேண்டும். அடுத்த சில மாதங்கள் இன்னும் கடினமாக இருக்கும். ஆனால் இதிலிருந்து நாம் வெளியேற வேண்டும். அதைத்தான் நான் செய்ய முடிவெடுத்தேன்.
IMF உடன் கலந்துரையாடி நாட்டுக்கான பொருளாதார உதவியை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரூபாய்க்கு மதிப்பு இருக்க வேண்டும், இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும்.
போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோட்டா கோகமவை தொட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை குறித்து கேள்விகள் கேட்கப்படும்போது பெரும்பான்மையைக் காட்டுவோம்.
எனக்கு இரு தரப்பிலும் பெரும்பான்மை உள்ளது அவசியமான நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்” என்றும் அவர் தெரிவித்தார்.