பிரதமர் பதவியை ஏற்று புதிய அரசைஅமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்படவில்லை என கட்சிப் பிரமுகர் நவீன் திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து நவீன் திசாநாயக்கவின் டுவிட்டர் பதிவில்,
‘ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டது குறித்து நான் பயமாகவும் கவலையுடனும் இருக்கிறேன்.
இந்த நடவடிக்கை குறித்து கட்சியின் செயற்குழுவிடம் ஆலோசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடக்கவில்லை.
நாட்டின் நலனுக்காகவும், எங்கள் கட்சிக்காகவும் புதிய பிரதமர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.