இலங்கையில் நேற்று 160,622 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று மாத்திரம் 160,622 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 40,110 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது டோஸ் 10,083 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 13,308 பேருக்கும் மடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 97,121 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

இதனை அடுத்து நாட்டில் இதுவரை 6,693,072 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 1,746,397 பேருக்கு முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply