தங்காலை-மொடகெடிஆர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தங்காலை மொட்டகடியார பகுதியில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பஹஜ்ஜாவ-தெத்துவல வீதியில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
தங்காலை மொடகெடிஆர பகுதியில் நேற்று இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தங்காலை – கதிர்காமம் வீதியில் கெப் வண்டியில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கெப் வண்டியின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்
உயிரிழந்தவர் தங்காலை குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்