கொழும்பு,ஜுன் 06
முகத்துவாரம், ரெட்பாணாவத்தை எனும் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் ஒன்றில் வந்த மர்ம கும்பல் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதில் 24 வயதுடைய வினோதன் என்ற இளைஞனே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் நாட்டில் பதிவான 5வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

