புத்தளம் குடாகிவுல பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
இதன்போது குடா கிவுல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்