
கொழும்பு,ஜுன் 06
சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா வரை காணப்பட்டது.
அத்தோடு முட்டை, இறைச்சி, கருவாடு மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பல கடைகளில் முட்டை விலை 48 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 1250 ரூபாவாக அதிகரித்துள்ளது. அனைத்து வகையான கருவாடுகளின் விலையும் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரின் மீன் விநியோக நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கூறுகையில்,
அனைத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் பெரிய செமன் ரின் ஒன்றின் விலை 750 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என்றார்.