சர்ச்சைக்குரிய கருத்துக்கு சுகாதார செயலாளர் மன்னிப்பு கோரினார்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அபாயத்திலிருந்து தப்புவதற்காக வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘இது ஒரு தவறான வார்த்தை. நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்கிறேன். தடுப்பூசிகள் ஒரு சமூகமாக மீண்டும் போராட எங்களுக்கு உதவுகின்றன’ என அவர் மேலும் கூறினார்.

நேர்மறையை பரிசோதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, கொவிட்டிலிருந்து முழுமையாக மீண்டதாக அறிவித்த டுவீட்டில் அவர் இந்தக் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் பதிவிட்ட டுவீட்டில், ‘கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பயந்து நடுங்கி வீடுகளில் பதுங்கிக் கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

இது, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மிகவும் சிரமத்துடன் பொது இடங்களைத் தவிர்த்து வருவோரை அவமதிப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

விதிகளை பின்பற்றியவர்களை இழிவுபடுத்துவதாக தொழிற்கட்சி குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குழுவின் நிறுவனர் அவரது கருத்துக்கள் ‘ஆழ்ந்த உணர்வற்றவை’ என்று கூறினார். இந்தநிலையில் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் மன்னிப்பு கோரியுள்ளார்.

Leave a Reply