ஆலயத்திருவிழாவில் பங்கேற்ற 49பேருக்கு கொரோனா; முடக்கப்படுமா கிராமம்?

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலிற்கமைய பொதுச் சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளதால் கரவெட்டி தெற்கு கிராமத்தை தனிமைப்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்

எனினும் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு அமைய தனிமைப்படுத்த பல நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply