சிறுவர் பணியாளர்களை தேடி விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலுமு் இதனை பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹோட்டல்களில் சமைப்பதற்கு, டைல்ஸ்களை வெட்டுதல் போன்ற ஆபத்தானப் பொருள்களைக் கையாள்வதற்கு, 16 – 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்துவதற்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தொழில் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் புதிய ஒழுங்குவிதிகளை உருவாக்க, தொழில் திணைக்களம் தயாராகி வருவதோடு, சிறுவர்களை எந்தெந்த தொழில்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான பட்டியல் ஒன்றையும் வெளியிட உள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply