வங்காலை பறவைகள் சரணாலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

சர்வதேச பறவைகள் பாதுகாப்பாக தங்கிச் செல்லும் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான கோபுரம் நிர்மாணிக்கும் வகையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) காலை வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பிரேமலால் எதிரிசிங்க தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் யு.என்.டி.பி நிறுவன அதிகாரிகள் , சர்வமத தலைவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

குறித்த கோபுரம் சுமார் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 35 அடி உயரத்தில் இருந்து பறவைகளை அவதானிக்கும் வகையில் குறித்த கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

வங்காலை பறவைகள் சரணாலயம் சர்வதேச பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

13 வகையான வெளிநாட்டு பறவைகள் சுமார் 5 இலட்சம் வரை ரசிய பகுதியில் இருந்து 14 நாடுகளை கடந்து வங்காலை சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. பருவ காலப்பகுதியில் குறித்த பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply