இலங்கைக்கு எண்ணெய் வழங்க விநியோகஸ்தர்கள் இல்லை; கைவிரித்த எரிசக்தி அமைச்சர்!

அடுத்த எண்ணெய் தாங்கி தரையிறங்கும் திகதி தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்பொது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலியக் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாத காணப்படுகின்றது.

இன்று இலங்கையில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றது. இந்நிலையில் 10,000 தொன்னுக்கும் குறைவான பெற்றோல் இருப்புகளே கிடைக்கின்றன. நாட்டின் சராசரி தினசரி எரிபொருள் நுகர்வு 3000 மெட்ரிக் தொன் காணப்படுகின்றது சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் எண்ணெய் தாங்கி வரும் 21ஆம் திகதி வரவுள்ளது. ஆனால் குறித்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

மற்றொரு எண்ணெய் தாங்கி கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளதுடன்இ அதற்கான பணம் செலுத்துவதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால்இ அது தரையிறங்குவது மேலும் தாமதமாகியுள்ளது.

இதேவேளைஇ நாட்டுக்குத் தேவையான எரிபொருளுக்கான விலை மனு கோரப்பட்ட போதிலும்இ எந்தவொரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 735 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியதன் காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்களை கூட்டுத்தாபனம் கோரியுள்ள போதிலும்இ விநியோகஸ்தர்கள் கிடைக்காததால் எரிபொருள் விநியோகம் எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *