வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேநேரம், வவுனியா சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை மற்றும் தமிழ் மத்திய மகா வித்தியாலம் ஆகிய நிலையங்களிலும் ஆசிரியர்களிற்கான தடுப்பூசிகள் இன்று காலை முதல் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களுக்கும் முன்னிலை வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

அதன்படி, குறிப்பாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னிலை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய சுகாதார சிகிச்சை மையங்களில் 30 வயதிற்கும் அதிகமானவர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply