உலக பொருளாதாரத்தை மீட்பதற்கு புதிய சவால்கள் உள்ளது – சர்வதேச நாணய நிதியம்

FILE PHOTO: The logo of the International Monetary Fund (IMF) is seen during a news conference in Santiago, Chile, July 23, 2019. REUTERS/Rodrigo Garrido/File Photo

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரத்தை மீட்பதற்கு புதிய சவால்கள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய பின்னணி குறித்து தமது அண்மைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், பொருளாதார மீட்சியை இரண்டு பிரிவுகளாகவும் வகைப்படுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுத்து நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதன் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அபிவிருத்தியடைந்த நாடுகள் முதல்நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்று மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அதன் இரண்டாம் நிலையில், வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தங்களுடைய நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும், உலக நாடுகளில் வைரஸ் பரவல் இருக்கும் வரையில், அபிவிருத்தியடைந்த நாடுகளை மீட்பதில் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தின் உலக பொருளாதாரமானது 6 சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அது அடுத்த வருடத்தில் 4.9 ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இணையான பொருளாதார வளர்ச்சியினை கடந்த ஏப்ரல் மாதமும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply