ரிஷாத் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும் அரசாங்கத்துக்குள் வரக்கூடாது

ரிஷாத் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துக்குள் வரக்கூடாது

சிறுமி ஹிஷாலினி விடயத்தில் ரிஷாத் பதியுதீனை காப்பாற்றும் சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாகவும், ஆனாலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரையில் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க நாம் துணை நிற்போம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துக்குள் வரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறுகின்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, மேலும் கூறுகையில், இந்த நாட்டில் உருவாகியுள்ள மிக மோசமான அரசியல்வாதி ரிஷாத் பதியுதீன் என்பதே எனது கருத்தாகும். அதில் நான் உறுதியாக உள்ளேன்.

ஆனால் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற நினைக்கும் நபர்கள், இன்றும் அரசாங்கத்தில் உள்ளனர். இவர்கள் 1994-2014 ஆம் ஆண்டு காலங்களில் ரிஷாத் செய்த அநியாயங்களையும் ஆதரித்தது பாதுகாத்து வந்தனர். அவர்கள் இன்றும் அரசாங்கத்துக்குள் உள்ளனர். எம்முடன் அரசாங்கத்தில் ரிஷாத் பதியுதீன் அங்கம் வகித்தபோதும் நானும் அமைச்சர் விமல் வீரவன்சவும் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இன்றும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹகீம் ஆகியோர் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துக்குள் வரக்கூடாது. இப்போதும் அவர்களின் அணியில் சிலர் எனக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்திருக்க முடியும். ஆனால் அவர்களின் ஆதரவை நான் ஒருபோதும் கேட்கவில்லை.

அதேபோல் அவர்களை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டு பயணிக்க ஏதேனும் சக்திகள் அரசாங்கத்துக்குள் இயங்குகின்றதா என்ற சந்தேகமும் எம்மத்தியில் உள்ளது. அவ்வாறு இடம்பெறுமானால் நாம் இந்த அணிக்குள் இருப்பதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி ஒருபோதும் அவ்வாறான தவறை செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

நன்றி – shortnews

Leave a Reply