போதைப்பொருளை அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பான அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும்.

மேலும் வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரின் ஊடக பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply