இலங்கையில் கொடூரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்..! samugammedia

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, கும்புக்கன வெல்லச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (17) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என்பதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply