பூரண கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குங்கள்…!தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை…!samugammedia

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும்  ஆதரவை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்  எதிர்வரும் 20ம் திகதி மருந்தகம் மற்றும் உணவகம் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி அன்றைய தினம் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி  சரவணராஜாவுக்கு  நீதி கிடைக்க வேண்டும், ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்  என  தெரிவித்தனர்.

Leave a Reply