உறவினரின் கொண்டாட்ட நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வானம்புரம் பகுதியில் நேற்றிரவு  கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உறவினரின் கொண்டாட்ட நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய குறித்த நபர்  கிணற்றில் குளிக்கச் சென்ற சமயம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரமந்தனாறு மயில்வாகம்புரம் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய ஆறுமுகம் தங்கவேலு என்னும்  மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply