இராஜாங்க அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகர் கைது…!samugammedia

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சென்று கொண்டிருந்த போதே மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply