ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்துள்ளார்.
காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை அவர் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பிற செய்திகள்
- நாட்டில் இந்த வருடத்தில் சிறைக்கு செல்வோர் தொகை அதிகரிப்பு!
- இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
- சர்வதேச ரீதியில் இலங்கையை ஓரங்கட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக அமையும்! – கரு
- பிரதமர் பதவியை ஏற்பாரா கோட்டா? எம்.பி. வெளியிட்டுள்ள தகவல்
- கொரோனாவை விட மிகத் தீவிரமாக பரவும் டெங்கு!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka



