ஆற்றங்கரையானுக்கு நாளை கொடியேற்றம்!

யாழ் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோட்சவ நிகழ்வுகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் இம்முறை நாளை 27.08.2022 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூசை மூலவரான வேலவருக்குப் பூசை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கேடகப் பூசை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply