எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் கடந்த வாரத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அண்மையில் ஹட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் நோர்வூட் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை ஹட்டன் பிரதேச தனியார் விருந்தகமொன்றில் இடம்பெற்றது.
கடந்த வாரத்தில் டிக்கோயா தரவளை கொலணி பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு, அண்மையில் ஹட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் நோர்வூட் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்துகடந்த 24ம் திகதி காலை ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அதேபோன்று நோர்வூட் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து இரு தரப்புகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது ஹட்டன் ரொத்தஸ் பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது அம் மரணங்களை ஹட்டன் நகர சபை ஊடாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தரவளை கொலணியில் மரணங்கள் நிகழும்போது அம் மரணங்களை நோர்வூட் பிரதேச சபை ஊடாக அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் இவ்விரு சபைகளுக்குரியபிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்ய தீர்மானம் எட்டபட்டுள்ளது.
பிற செய்திகள்



