மாத்தறையில் நீராட சென்ற நால்வர் மாயம்

மாத்தறை,ஓக 26

மாத்தறை, பிட்டபெத்தர பகுதியில், நில்வலா கங்கையில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் ஐந்து பேர் குளிக்கச் சென்ற நிலையில், அவர்கள் அனைவரும் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச மக்களின் உதவியோடு ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏனைய நான்கு பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply