யாழ்.குடாநாட்டிலும் மண்ணெண்ணெய் விநியோகம்!

யாழ்.குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சபுஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீனவர்களுக்காக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுவந்தது.

இதற்கமைய,யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அடுத்த சில நாட்களில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அதேவேளை இவ்வாறு விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply