மஸ்கெலியாவில் நூலக வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம்!

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் சாமிமலை வாசிகசாலை இணைந்து நடாத்திய நூலக  வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு 2022.08.26 அன்று கௌரவ தவிசாளர் G.செண்பகவள்ளி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்து சுயதொழில் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தினர். குறித்த செயலமர்வில் சுயதொழில் ஒன்றினை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், செயலாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் அலுவலக உத்தியோகத்தர்கள்,  நூலக அங்கத்தவர்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ளலில் ஆர்வமுள்ளவர்கள்  அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பொது நூலக கற்றல் வள மத்திய நிலையத்தில் கணணி பாடநெறியினை பூர்த்தி செய்த நூலக அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply