கன மழையால் விவசாய அனைக்கட்டு உடைப்பெடுத்ததால் விவசாயிகள் பாதிப்பு!

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கனத்த மழை காரணமாக கொசுமங்கல விவசாய நிலத்தின் ஊடாக செல்லும் ஆற்று உடைப்பின் காரணமாக பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

சுமார் ஏழு இலட்சம் ரூபா செலவில் விவசாயிகளின் முயற்சியினால் செய்யப்பட்ட அனைக் கட்டு மீண்டும் கனமழை காரணமாக உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன் ஊடாக 600 ஏக்கர் வயல் நிலங்களுக்கான நீர் கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனை உரிய அதிகாரிகள் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply