ரூ.5 கோடி பெறுமதியான தங்கம் கடத்திய நபர் கைது

கொழும்பு, ஓக 27

சட்டவிரோதமான முறையில் 5 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நபர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக  நபர் இன்று காலை சுங்க பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர்  பிரான்ஸில் இருந்து இன்று அதிகாலை  வந்த விமானத்தில்  இலங்கை வந்துள்ளதாக  ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாலம்பே பகுதியை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply