திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை தடைபடுமா?

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ்களின் எண்ணிக்கை 25% ஆக குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீண்ட தூர சேவைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், குறுகிய தூர சேவை பஸ்களின் ஓட்டமும் 25 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றும் நாளையும் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை பஸ்கள் முழுமையாக இயங்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply