இலங்கை தொடர்பில் சீன தூதுவரின் கருத்துக்கு இந்தியாவின் நேரடி பதில்

சீனா,ஓக 28

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவு தேவை.

இதனை தவிர வேறொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தேவையற்ற அழுத்தங்கள் அல்லது தேவையற்ற சர்ச்சைகள் அல்ல என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர், அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

உயர் ஸ்தானிகரகம் இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், சீன தூதரின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம்”

அந்த கருத்துக்கள் அவரது அடிப்படை இராஜதந்திர ஆசாரங்களை மீறும் தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய தேசிய அணுகுமுறையை பிரதிபலிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளது.

‘இலங்கையின் வடக்கு அண்டை நாடு பற்றிய அவரது பார்வையானது, அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதன் அடிப்படையில் இருக்கலாம்.

எனினும் இந்தியா மிகவும் வித்தியாசமானது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று உயர் ஸ்தானிகரகம் ட்வீட் செய்துள்ளது.

ஒளிவுமறைவு மற்றும் கடன் உந்துதல் நிகழ்ச்சி நிரலே இப்போது இலங்கைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

குறிப்பாக சிறிய நாடுகளின் முன்னேற்றங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கு ஆதரவு தேவை. வேறொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வது அல்ல.

அத்துடன் தேவையற்ற அழுத்தங்கள் அல்லது தேவையற்ற சர்ச்சைகள் அல்ல’ என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் ட்வீட் செய்துள்ளது.

Leave a Reply