புதிய பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை!

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

5 பேரை உள்ளடக்கிய வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆளுநர் நடவடிக்கை எடுத்துவருவதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிற செய்திகள்

Leave a Reply