கப்பம் கோரி கடத்தப்பட்டிருந்த கந்தானை – ஹப்புகொட பகுதியைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் மூத்த மகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கப்பம் பெறும் நோக்கில் கந்தானை – ஹப்புகொட பகுதியைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் மகன் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் நேற்று கடத்தப்பட்டிருந்தார்.
22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டார். குறித்த இளைஞரை விடுவிப்பதற்காக அவரது தந்தையிடம் 56 லட்சம் ரூபா கோரப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், நேற்று காலை வத்தளை – கெரவலப்பிட்டிய பகுதியில் அவர் பயணித்த சொகுசு ரக மகிழுந்தும் கடத்தப்பட்டது.
தந்தையின் பணம் தொடர்பான முறுகல் தொடர்பில் குறித்த இளைஞர் கடத்தப்பட்டதாகவும் அவரால் 56 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
பணம் வைப்பிலிடப்பட்டதன் பின்னர் கடத்தப்பட்டிருந்த குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கி தரவுகளுக்கு அமைய நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்



