யாழில் மாட்டுக் கன்றை அடித்துக் கொலை செய்த விசமிகள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய மாட்டுக் கன்றினை அடித்துக் கொலை செய்த கொடூரம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.

இதன் காரணமாக கணவரின் தரப்பினர், பிரச்சினையில் தலையிட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்கு சென்று அங்கு நின்ற 3 மாதங்கள் நிரம்பிய மாட்டுக் கன்றினை அடித்துக் கொலை செய்து விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply