செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

யாழ்ப்பாணம்,ஓக 28

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று நேற்று மாலை கொடியேற்றப்பட்டு மஹேற்சவம் ஆரம்பமானது.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், 6ம் திகதி கைலாச வாகனமும், 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், 9ம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply