மகாவலி ஆற்றில் குதித்து நபர் ஒருவர் மாயம்

கண்டி,ஓக 28

கண்டி, பேராதனை பகுதியில் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் ஆற்றில் குதித்த இடத்தில் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை, மடிக்கணினி, 2 வங்கி அட்டைகள், பரீட்சை நுழைவுச்சீட்டு, பணப்பை மற்றும் ஒரு ஜோடி காலணி என்பன அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காணாமல் போனவர் புலகஹாபிட்டிய, அஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையின் உயிர்காக்கும் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply