மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானம்! – வெளியானது அறிவிப்பு

இன்று இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் விதம், கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply