அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச்செல்லமுற்பட்ட நால்வர் வண்ணாத்துவில்லு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுனதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகள் 3 லொறிகளில் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கைமை கவண்ணாத்திவில்லு நகரில் வைத்து லொறிகளை நிறுத்தி சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போதே 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகபெருமதியுடைய தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் வண்ணாத்திவில்லு பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று லொறிகளையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்தனர்.



பிற செய்திகள்



