மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

நேற்று இரவு சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொலிசார் இந்த சுற்றிவளைப்பில் மேற் கொண்ட போது ஆறு பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஹட்டன் காவல் துறை அதிகாரி பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் அடங்குவதாக தெரிய வந்துள்ளது.

இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply