
கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல தயாரான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் 7 பேரின் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு வந்து மல்வத்து அஸ்கிரிய பெரியவர்களை தரிசித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிரிக்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல அனுமதி கோரியிருந்தனர்.
அங்கு, அந்நாடுகளில் அவர்கள் தங்குவதற்கு உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 650 டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட இருந்தது.
விளையாட்டு கவுன்சில் என்ற வகையில் நாங்கள் அதை எதிர்த்தோம். இவை நிறுத்தப்படும் போது எங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. சரியானதைச் செய்யவே இங்கு வந்தேன் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்



