
கொழும்பு, ஓக 29
இந்த முறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள, கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் என்ற ரீதியில் இந்த பாதிப்புக்கு தாமும் பொறுப்பேற்கின்றோம் என்றார்.



